இசைமைப்பாளர் மற்றும் நடிகருமான ஜீவி. பிரகாஷ் தனது இசையில் அதிக பாடல்களைப் பாடிய பாடகி சைந்தவியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னரும் கோலிவுட்டின் சூப்பர் ஹீரோக்களுக்கு பாடல் பாடிக்கொடுப்பது, இசையமைப்பது என இருவரும் கேரியரில் பிசியாக இருந்து வந்தனர்.
இந்த நிலையில், கடந்த மாதம் தான் இந்த தம்பதிக்கு அழகிய பெண்குழந்தை பிறந்தது. இந்த செய்தி கோலிவுட்டில் கொண்டாடிய நிலையில், தற்போது பிரபல பிக்பாஸ் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் தனது இன்ஸ்டாகிராமில் மனைவி நிஷா மற்றும் சைந்தவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதில், “சைந்தவி… உன் இளவரசி அன்வி (Anvi)-ஐ காண லாக்டவுன் எப்பொழுது முடியும் என்று ஆவலுடன் இருக்கிறேன் என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் ஜிவி – சைந்தவி மகளின் பெயர் அன்வி என்பது தெரியவந்துள்ளது.