கொலை செய்யப்பட்ட நண்பர் ஒருவரின் இறுதிச்சடங்குக்கு சென்ற கனேடிய இளம்பெண் ஒருவர் மாயமானார்.
இரண்டு மாதங்களுக்குப் பின் Tiki Laverdiere (25) என்ற அந்த இளம்பெண்ணின் உடல் பாகங்கள் North Battleford பகுதியில் கண்டெடுக்கப்பட்டன.
அவரது மரணம் கொலையாக கருதப்பட்டு எட்டு பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
ஆனால், நீதிமன்றம் வழக்கு தொடர்பான விவரங்களை வெளியிட தடை விதித்திருந்தது. ஆகையால், Tiki எதற்காக கொல்லப்பட்டார் என்பது முதலான விடயங்கள் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், வழக்கில் தொடர்புடைய Brent Checkosis மற்றும் Mavis Takakenew என்னும் இருவருக்கு இப்போது தண்டனை விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
அவர்கள் இருவர் மீதும் Tikiயை கொலை செய்ய உதவியதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது.
19 வயதான Checkosisக்கு ஏழு ஆண்டுகளும், 55 வயதான Takakenewக்கு 18 மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் Tikiயின் உறவினர்கள் இந்த தண்டனை மிகவும் குறைவு என்றும் தாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.