நடிகர் அருண் விஜய் வெளியிட்ட ஷாக்கிங் காட்சி!

நடிகர் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியை பார்த்த ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

அதில் அவர் அந்தரத்தில் கம்பி ஒன்றில் தலைகீழாக தொங்கி உடற்பயிற்சி செய்த போது தவறி கீழே விழுகிறார்.

கொஞ்சம் பழைய வீடியோவான அதனை பகிர்ந்து, ”எப்பொழுதும் இதனை முயற்சிக்காதீர்கள். எப்பொழுதுமே உடற்பயிற்சி செய்யும் போது உங்கள் மிஷினை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

நான் கிழே விழுந்த சமயத்தில் இருந்து சரியாக ஒரு வாரத்திற்கு காலில் வீக்கம் இருந்தது. நல்லவேளை என் தலையில் அடிபடவில்லை.

கடவுளுக்கு நன்றி. பயிற்சியாளர்கள் அல்லது கண்காணிப்பாளர்கள் இல்லாமல் உடற்பயிற்சி செய்யாதீர்கள்” என்று ரசிகர்களுக்கு அறிவுரை தெரிவித்துள்ளார்.