பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் இலங்கை தர்ஷன்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது இயல்பான நடவடிக்கைகள் மூலம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த தர்ஷன் ஹீரோவாக நடிக்கும் படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது.
இதனையடுத்து அவர் ஹீரோவாக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன் படி தர்ஷன் ஹீரோவாக நடிக்கும் படத்தை புதுமுக இயக்குநர் இயக்க, அனிருத் அந்த படத்துக்கு இசையமைக்கிறாராம்.
இந்த படத்தை ஐங்கரன் இண்டர்நேஷனல் சார்பாக கருணாமூர்த்தி தயாரிக்கிறார்.
இந்த படம் கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், ஊரடங்கு நீக்கப்பட்ட பிறகு செப்டம்பர் அல்லது அக்டோபரில் நடைபெறவிருக்கிறது. இதனை கேட்ட தர்ஷன் ரசிகர்கள் கடும் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.