வீட்டில் திருட்டுத்தனமாகச் சாராயம் காய்ச்சிய, சீரியல் நடிகை தனது நான்காவது கணவருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொரோனா காரணமாக லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். உலக அளவில் கொரோனா பாதிப்பால் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இருந்தும் இந்த வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. நாடு முழுவதும் ஊரடங்குப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகப் பலரது பொருளாதாரம் கேள்விக்குறியாகி இருக்கிறது.
தினசரி வேலை பார்த்து சம்பாதிப்பவர்களின் வாழ்க்கை சிக்கலாகி உள்ளது. இந்நிலையில், கேரளாவில் இந்த லாக்டவுனை பயன்படுத்தி சாராயம் காய்ச்சி விற்று பணம் சம்பாதிக்க முடிவு செய்துள்ளார்.
மஞ்சு சினி என்ற இந்த நடிகை சில தொடர்களிலும் நாடகங்களிலும் நடித்துள்ளதோடு, துணை நடிகையாகவும் படங்களில் நடித்துள்ளார். இவர், லாக்டவுனைப் பயன்படுத்தி தனது வீட்டில் சாராயம் காய்ச்சி விற்றுவருவதாக வந்த தகவலை அடுத்து, ஆரியங்காவு பொலிசார் அங்கு திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.
அப்போது வீட்டில் சாராய கேன்கள் இருந்ததும் விற்பனை நடப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரையும், அவருடன் சாராயம் விற்றுக்கொண்டிருந்த நான்காவது கணவர் விகாஷ் என்பவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
விகாஷ், ஏற்கனவே கொலை குற்றவாளி. கடந்த சில வருடத்துக்கு முன் ஒட்டசேகரம் என்ற பகுதியில் அருண் என்ற வாலிபரை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர். இவர்களை கைதுசெய்த பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.