ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னர் பாகுபலி படத்திலிருந்து வசனம் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக, பல கிரிக்கெட் பிரபலங்கள் வீட்டிலேயே பொழுதை கழித்து வருகின்றனர். பல வீரர்களும் கிரிக்கெட்டை விளையாட ஆவலாக காத்திருப்பதை அவர்களின் இணையப்பக்கத்தில் வெளியிட்டு வருத்ததை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வார்னர் தனது டிக்டாக் பக்கத்தில் இந்திய திரைப்படங்கள் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது, இந்திய அளவில் வெற்றி பெற்ற பாகுபலி திரைப்படத்தின் வசனம் ஒன்றை பேசிடிக்காட்டி வெளியிட்டிருக்கிறார். அந்த டிக்டாக் காட்சி கிரிக்கெட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.