கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, ஒர்க் அவுட் செய்வது விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர்.
அந்தவகையில் நடிகையும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினருமான ரோஜா களத்தில் இறங்கி தனது தொகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணியான கிருமி நாசினி தெளித்து தூய்மை படுத்திய புகைப்படங்கள் சமீபத்தில் சமூகவலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில் தற்போது வீட்டில் இருந்தபடியே fitness challenge ஏற்று உடற்பயிற்சிகள் செய்யும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்ஸ், தான் இன்னும் ஒரு பிட்னஸ் நடிகை என்பதை ரோஜா எல்லாருக்கும் வெளிப்படுத்துகிறாராம் என கூறி கலாய்த்து வருகின்றனர்.
Ever Green Actress and Politician #Roja 1 Minute Challange.!#RojaSelvamani #actressroja #FilmyFocus #ఫిల్మీఫోకస్ #ActressRojaselavamani @rojaselvamani pic.twitter.com/qkBq7z2Iqk
— Filmy Focus (@FilmyFocus) May 15, 2020
Roja fitness challenge pic.twitter.com/gyFDoNITpW
— NeedhiFastNews (@Needhifastnews1) May 16, 2020