தொலைக்காட்சிகள் மத்தியில் ஒரு புதிய திருப்பத்தை உண்டாக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ். ஆரம்பத்தில் எதிர்ப்புகளை சந்தித்தாலும் பின் வருடங்களில் நிகழ்ச்சியை இளம் தலைமுறையினர் அதிகம் பார்க்கத்தொடங்கிவிட்டனர்.
தற்போது தமிழ் வெர்சன் போலவே தெலுங்கு வெர்சன் நிகழ்ச்சி 4 ம் சீசனை எட்டிவிட்டது. கடந்த மூன்றாவது சீசனனை நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்கினார்.
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் நடிகையும் டிவி சானல் பிரபலமுமான வர்ஷினி சௌந்தர்ராஜ் முடிவெடுத்துள்ளாராம்.
சந்தாமாம கதலு படம் மூலம் அறிமுகமான வர்ஷினி டிவி சானல்களில் நுழைந்து தற்போது ஹாட் சென்சேசனாக மாறியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் வருவது உறுதியானால் பிக்பாஸ் வீட்டில் அவரை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.
கடந்த வருடம் டிவி சானல் நடிகை ஸ்ரீமுகி கலந்து கொண்டு இறுதி சுற்று வரை சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.