இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது ஆனால் கொரோனவால் தள்ளிப்போனது.
இந்நிலையில் அப்படத்தின் கதாநாயகியான மாளவிகா மோகனன் ஒரு பேட்டியில் நடிகர் குறித்து பேசியுள்ளார்.
அவர் பேசுகையில் “அவருடன் பணியாற்றியது மிகவும் அற்புதமாக இருந்தது. நான் பார்த்ததில்லே அவர்தான் மிகவும் தன்மையான சூப்பர் ஸ்டார்.
மேலும் தற்போது நாங்கள் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டோம்” என கூறியுள்ளார்.