காதல் பட்டாம்பூச்சி போன்றது – த்ரிஷா!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை த்ரிஷா கொரோனா விடுமுறை காலப்பகுதியில் இரசிகர்களுடன் உரையாடி வருகிறார்.

இதன்போது இரசிகர்களின் ஏராளமான கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், காதலை பட்டாம்பூச்சியுடன்  ஒப்பிட்டு பேசியுள்ளார்.

காதல் குறித்து கருத்து தெரிவிக்கும் த்ரிஷா, ‘நான் இன்னும் காதலை சந்திக்கவில்லை.  காதல் என்பது பட்டாம் பூச்சி போன்ற உணர்வை கொடுப்பது.  உண்மை காதல் இன்னும் நிறைய இடங்களில் இருக்கிறது.  காதல் இல்லாமல் வாழவே முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

முதல்முறையாக காதல் குறித்து  த்ரிஷா கூறிய இந்த  பதில் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.