“மாஸ்டர்” திரைப்படம் குறித்து லோகேஷ் கனகராஜின் அறிவிப்பு!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் போஸ்ட் புரொக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “எனது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கின’ எனப் பதிவிட்டுள்ளார்.

கல்லூரி பேராசிரியராக விஜய் நடிக்கும் இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகவிருந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக பணிகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.

மீண்டும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதால் படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.