படுக்கையறையில் பிணமாக மனைவி… 3வது மாடியிலிருந்து தற்கொலை செய்து கொண்ட கணவர்! வெளியான உண்மை….

கள்ளத்தொடர்பால் மனைவியை கொலை செய்த கணவர் 2 நாட்களுக்கு பின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா அருகே கூட்லுகேட் பகுதியைச் சேர்ந்தவர் மணீஷ்குமார்(38). பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இவரது மனைவி சந்தியா(32). இவரும் பீஹாரை சேர்ந்தவர் தான். இந்த நிலையில் மணீஷ் குமாருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் சந்தியாவிடம் பேசுவதற்காக அவரின் உறவினர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன் அவரின் செல்போனை தொடர்பு கொண்டுள்ளனர்.

ஆனால் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால், அவரது உறவினர்கள் நேரில் வந்து பார்க்க வந்துள்ளனர். அப்பொழுது சந்தியாவின் உறவினரைப் பார்த்த மணீஷ், பதட்டத்தில் 3-வது மாடிக்குச் சென்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, அங்கு சந்தியா பிணமாக கிடந்துள்ளதைக் கண்டு பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மணீஷ், சந்தியாவின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பொலிசார் நடத்திய விசாரணையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மணீஷ்குமாருக்கும், சந்தியாவுக்கும் கள்ளத்தொடர்பு விவகாரம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரம் அடைந்த மணீஷ்குமார், சந்தியாவின் கழுத்தை நெரித்து அவரை கொலை செய்துள்ளார். பின்னர் கொலையை மறைக்க அவர் 2 நாட்களாக சந்தியாவின் உடலை வீட்டிலேயே வைத்துவிட்டு திட்டம் தீட்டியுள்ளார்.

ஆனால் சந்தியாவின் உறவினர்கள் திடீரென வந்ததால் மணீஷ் குமார் பதட்டத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து பொலிசார் பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.