திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி, தலைமைச்செயலகத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.கே.செலவமணி, ஊரடங்கு காரணமாக திரைத்துறை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. பெரும்பாலான ஊழியர்கள் பாதிக்கப்ட்டுள்ளனர்.
இந்த ஊரடங்கு காரணமாக தொலைக்காட்சியில் மீண்டும் ஒரே காட்சிகளை பார்த்து வருகின்றனர். அரசு சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கும் பட்சத்தில், தகுந்த பாதுகாப்பு முறையில் படப்பிடிப்பு துவங்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், அரசின் கட்டுப்பாடுகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு படப்பிடிப்பு நடக்கும் என்றும், சின்னத்திரைக்கு அனுமதி வழங்கும் பட்சத்தில் பல தொழிலாளர்கள் மற்றும் மக்கள் பலன் பெறுவார்கள். விரைவில் திரையரங்குகள் திறக்கவும், படப்பிடிப்பு நடக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள மற்றும் வாழ்வாதாரத்தை இழந்துள்ள திரைத்துறை தொழிலாளர்களுக்கு தேவையான உதவியை செய்ய அணைத்து தரப்பிலும் தொடர்ந்து நிதி திரட்டப்பட்டு, தேவையான அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
இதன்மூலம் விரைவில் சின்னத்திரைக்கான படப்பிடிப்பு துவங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால், நாடகம் பார்க்க இயலாமல் இருந்த இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.