தன்னைப்பற்றிய கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் பிரபல நடிகையான பிரியா பவானி சங்கர்.
செய்தி வாசிப்பாளராகத் தொடங்கி பின்னர் சின்னத்திரையில் ஹீரோயினாக அறிமுகமாகி தனக்கென ரசிகர்களைச் சம்பாதித்தவர் பிரியா பவானி சங்கர்.
தொடர்ந்து வெள்ளத்திரையில் கால்பதித்து தனக்கான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து அசத்தி வருகிறார்.
‘குருதி ஆட்டம்’, ‘களத்தில் சந்திப்போம்’, ‘பொம்மை’, ‘இந்தியன் 2’ உள்ளிட்ட பல படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ள பிரியா, ஊரடங்கு உத்தரவால் குடும்பத்தினருடன் நேரத்தை செலவழித்து வருகிறார்.
இந்நிலையில் பிரியா அவரது காதலரை பிரிந்து விட்டதாக சில நாட்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியானது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக இன்ஸ்டாவில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளவர், என்னைப் பற்றிய கிசுகிசுக்களைப் படிக்கும் போது இப்படிதான் இருக்கும்” என தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது கூட ப்ரியா பவானி சங்கர் – ராஜ் இருவருமே காதலித்துதான் வருகிறார்கள், அவருக்கு ட்விட்டர் தளத்தில் கணக்கு கிடையாது.
பலரும் அதில் வரும் பதிவை வைத்து செய்திகள் வெளியிடுகிறார்கள். அவர் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் ஆகியவற்றில் மட்டுமே இருக்கிறார் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.