இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள பஞ்சகுலா மாவட்டத்தில் 23 வயது பெண்ணொருவர் வசித்து வருகிறார். இவர் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்மணியாக இருந்து வரும் நிலையில், இந்த பெண் தந்தையால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த பெண்ணிற்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு அவதியுற்ற நிலையில், அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்த சமயத்தில் குழந்தை பிறந்துள்ளது. இதன்பின்னர் இது குறித்த சம்பவம் வெளியே வந்து, காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், இளம்பெண் தந்தையால் பல மாதமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வந்ததும், பெண் கர்ப்பிணியாக இருப்பது தந்தை அறிந்துகொண்டும், பாலியல் பலாத்காரம் அரங்கேற்றியதும் தெரியவந்துள்ளது.
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சொந்த மகளை தந்தையே பாலியல் பலாத்காரம் செய்ததும், இந்த கொடூர செயலை குடும்ப உறுப்பினர்கள் அறிய வாய்பில்லாத வண்ணம் நாடகமும் அரங்கேற்றப்பட்டுள்ளது. இதனைப்போன்று மத்திய பிரதேசம் மாநிலத்தில் 18 வயது சிறுமி தந்தையால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும், இதற்கு தாய் உடைந்தையாகவும் இருந்துள்ளார்.
மேலும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய காமுக தந்தை திருமணத்திற்கு முன்னர் தாம்பத்தியம் பழகவேண்டும் என்ற கேவல எண்ணதோடு பாலியல் பலாத்காரம் செய்ததும், இதற்கு சிறுமியின் தாய் உடந்தையாக இருந்த நிலையில், சிறுமியின் மூத்த சகோதரி 1098 உதவி எண்ணிற்கு தொடர்பு கொண்டதன் மூலமாக சிறுமி மீட்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.