அமெரிக்காவில் மதுபான விடுதியில் மது அருந்திய இளம்பெண் அங்கிருந்தவர்களுக்கு முத்தம் கொடுத்து மோசமாக நடக்க முயன்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ப்ளோரிடாவை சேர்ந்தவர் அத்ரா ஆடம்ஸ். இவர் Indialantic-ல் உள்ள மதுபான விடுதிக்கு சென்றார்.
பின்னர் மது அருந்திய அத்ரா முன்பின் தெரியாத அங்கிருந்த நபரளுக்கு முத்தம் கொடுக்க முயன்றுள்ளார்.
இதையடுத்து பொலிசாருக்கு தொடர்ந்து நான்கு முறை போன் செய்த அத்ரா, இங்கு கொரோனா சமயத்தில் சமூக இடைவெளியை யாரும் கடைபிடிக்கவில்லை என புகார் கூறினார்.
அத்ராவின் செயல் மோசமாக தொடங்கிய நிலையில் மதுவிடுதி உரிமையாளர் அவரை வெளியில் செல்லுமாறு கூறினார்.
இதை தொடர்ந்து அத்ரா அங்கிருந்து வெளியேறிய போதிலும் வாகன நிறுத்துமிடத்தில் உட்கார்ந்து கொண்டு அங்கிருந்து கிளம்ப முடியாது என கூறினார்.
சம்பவ இடத்துக்கு பொலிசார் வந்த போதும் அவர்களிடம், நான் இரவு முழுவதும் வாகன நிறுத்துமிடத்தில் தான் இருப்பேன், இங்கிருந்து செல்ல மாட்டேன் என கூறி அடம்பிடித்தார்.
பின்னர் பொலிசார் அத்ராவை கைது செய்தார்கள், அவர் மீது ஒழுங்கற்ற முறையில் நடந்து கொண்டது, அதிகாரியை எதிர்ப்பது, அவசர உதவி எண்ணை தவறாக பயன்படுத்துவது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.