முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டும்தான்தான் மூட்டு வலி வந்தது. ஆனால் மூட்டுவலியால் அவதிப்படும் இளையதலைமுறையினரின் எண்ணிக்கை இன்று அதிகரித்துவிட்டது.
எலும்புகளின் வளர்ச்சியும் வலிமையும் உறுதியாக இருந்தால் தான் எலும்பு மூட்டுகளில் தேய்மானம் வராது. அப்படி எலும்புகள் தேய்மானம் வராமல் உறுதியாக இருக்க ஒரே மூலிகை முடக்கத்தான் கீரை தான்.
முடக்கு + அறுத்தான் என்று பெயரிலையே முடக்கை விரட்டி அடிப்பதில் முக்கியத்துவம் பெற்றுள்ளது முடக்கத்தான் கீரை. உடலில் உண்டாகும் வாதக்கோளாறுகளை சரி செய்வதால் இதை முடக்கத்தான் என்று அழைக்கிறோம்.
உடலில் வாதம், பித்தம், கபம் மூன்றும் சமநிலையில் இருக்க வேண்டும் என்னும் நிலையில் வாதத்தை கட்டுப்படுத்தி வைக்க இவை உதவுகிறது. வாத நோய்க்கு நிச்சய் தீர்வாய் முடக்கத்தான் இருக்கும் என்று அறிந்து முடக்கத்தான் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தார்கள்.
மூட்டுவலி இருப்பவர்கள் தொடர்ந்து முடக்கத்தான் கீரையை சாப்பிட்டு வந்தால் நிச்சயம் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.
மூட்டுவலிக்கு அதிமருந்தாகும் முடக்கத்தான் கீரை
- மூட்டுகளில் இருக்கும் அதிகப்படியான யூரிக் அமிலம், பாஸ்பரஸ், சுண்ணாம்பு போன்றவை தான் மூட்டுகளில் வலியை உண்டாக்குகின்றன.
- இதை கரைத்து வெளியேற்றினால் மூட்டுகளில் வலியை குறையும்.
- கை, கால், இடுப்பு எலும்புகளில் மூட்டுகள் இருந்தாலும் மூட்டுவலி என்றால் அது கால் மூட்டில் உண்டாகும் வலிதான் அதிகமாக இருக்கும்.
- கால் மூட்டில் வலி இருந்தால் முடக்கறுத்தான் கீரையின் பூவையும் பெரிய காம்புகளையும் நீக்கி இலையை மட்டும் சேர்த்து மைய அரைத்து கால் முட்டியிலும் வீக்கம் இருக்கும் இடத்திலும் தேய்த்துவந்தால் வீக்கம் குறையும்.
- உள்ளுக்குள் இருக்கும் யூரிக் அமிலமும் படிப்படியாக குறைய தொடங்கும்.
- முடக்கத்தான் இலையை நிழலில் உலர வைத்து மிக்ஸியில் பொடித்து சலித்து வைத்துகொள்ள வேண்டும்.
- தினமும் காலையில் வெறும் வயிற்றில் இதை வெந்நீரிலோ அல்லது தேனிலோ அரை டீஸ்பூன் பொடியை கலந்து குழைத்து சாப்பிட்டால் மூட்டுகளில் வலி குறைவதை பார்க்கலாம்.
- உடலில் எலும்பு மூட்டுகளில் தங்கியிருக்கும் யூரிக் அமிலத்தை கரைத்து சிறுநீராக வெளியேற்றும்.
- மூட்டுகளுக்கு நடுவில் இருக்கும் ஜெல்லின் உற்பத்தியை அதிகரித்து எலும்புகளை உறுதியாக வைக்க உதவும்.
- முடக்கத்தான் சிறு கசப்பு கொண்டிருக்கும் என்றாலும் அதை சுவைக்கும் போதும், சூப் போல் செய்து குடித்து வரலாம்.
- மூட்டுகளில் வலி உணர்வு தெரிந்தால் காபி, டீ பானங்களை தவிர்த்து தினமும் ஒரு கப் முடக்கத்தான் சூப் குடித்து வந்தால் வலி குறையும்.
- இவை மூட்டுவலியோடு கீல் பிடிப்பு, கீல் வாதம், ஆஸ்டியோபேராசிஸ், கால்களை நீட்டியோ மடக்கியோ அமருவதில் சிரமம் இருந்தால் முடக்கத்தான் உணவு எடுக்க வேண்டும். அப்படி இந்த கீரையை எடுத்துக் கொண்டால் வலியை நிரந்தரமாக போக்கக் கூடிய சக்தி இவற்றிற்கு உண்டு.
- சிலருக்கு காலையில் எழுந்ததும் இடுப்பு, பாதம், கை, கால் மூட்டுகளில் வலி அதிகமாக இருக்கும். தொடர்ந்து மூட்டுகளில் வலி இருக்கும் போது அவை தீவிரமாகி ருமட்டாய்டு வரை கொண்டு சென்று விடும். இந்த ருமட்டாய்டு ஆர்த்ரைட்டீஸ் இருப்பவர்கள் உணவில் அவ்வபோது முடக்கத்தான் சேர்த்து வந்தால் இந்த பிரச்சினை முற்றிலும் தீரும்.
- முடக்கத்தான் கீரையை சுத்தம் செய்து மிக்ஸியில் மைய அரைத்து தோசை மாவில் கலந்து தோசையாக சாப்பிட்டு வந்தால் சிறிதும் கசப்பு தெரியாது.
- வளரும் போதே குழந்தைகளுக்கு எலும்புகளின் வளர்ச்சிக்கு முடக்கத்தான் கீரை அவ்வப்போது செய்து கொடுக்கலாம்.
- பெண்கள் மாதவிடாய் மற்றும் மெனோபாஸ் காலங்களில் இழக்கும் அதிகப்படியான கால்சியம் சத்தால் ஆஸ்டியோபெராசிஸ் என்னும் எலும்பு நோயால் பாதிக்கப்படுவார்கள். அதனால் வளரும் பருவத்திலிருந்தே அவ்வபோது உணவில் முடக்கத்தான் கொடுப்பது மிகவும் நல்லது.
- சிறு பிள்ளைகள் வளரும் காலத்தில் முடக்கத்தான் பொடியை வாரம் இருநாள் சாதத்தில் நல்லெண்ணெய் கலந்து சாப்பிட கொடுத்து வரலாம். இதனால் எலும்புகள் உறுதியாகும்.