உயர் ரத்த அழுத்தத்தை எப்படி கட்டுக்குள் வைக்கலாம்?

ஒருவருக்கு ரத்த அழுத்தம் 140/90 என்ற அளவிற்கு அதிகமாக இருந்தால் அவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது என்று அர்த்தம் கருதப்படுகின்றது.

தலைவலி, தலைச்சுற்றல், மயக்கம், வாந்தி, மூக்கில் ரத்தக்கசிவு, நடக்கும்போது மூச்சு வாங்குதல், நெஞ்சுவலி, கால்வீக்கம், களைப்பு, படபடப்பு ஆகியவை உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் ஆகும்.

ஒருவர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படும் போது உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கும். இதனால் இதயத்தமனிகளில் அடைப்பு உண்டாகி அவை இதய நோய் மாரடைப்பை உண்டாக்க பெருமளவில் வாய்ப்புண்டு.

அதுமட்டுமின்றி பல்வேறு தீவிர உடல்நிலை பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

இத்தகைய ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள தினமும் சில செயல்களை செய்தாலே போதும் விரைவில் உயர் ரத்த அழுத்ததை குறைக்கலாம்.

  • உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்காமல் பார்த்துகொள்ள வேண்டும்.
  • அதிகரிக்கும் உடல் எடையால் ரத்த அழுத்தமும் அதிகரிக்கும் என்பதால் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருங்கள். உங்கள் உயரத்துக்கேற்ற உடல் எடையை தக்கவைத்துகொள்வது அவசியம்.
  • உடல் உழைப்பில்லாமல் இருப்பதும் நோயை வரவேற்கும் என்பதால் தினமும் 15 நிமிடங்களாவது உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
  • உணவில் உப்பின் அளவை குறைத்துகொள்ள வேண்டும்.
  • கொழுப்பு மற்றும் டிரைகிளிசரைடு உள்ள உணவுகள் தவிர்க்க வேண்டும்.
  • பதப்படுத்தப்பட்ட உணவுகள், கார்பனேட் குளிர்பானங்கள், செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவையும் தவிர்க்க வேண்டும்.
  • புகைப்பழக்கம், ஆல்கஹால் பழக்கத்தை இயன்றவரை கைவிட வேண்டும்.
  • மன அழுத்தம் உண்டாகாமல் பார்த்துகொள்ள வேண்டும்.
  • ரத்த அழுத்தம் உறுதியானால் கொழுப்பின் அளவையும் பரிசோதித்து கட்டுக்குள் வைக்க வேண்டும்.
  • ரத்த அழுத்தம் கட்டுக்குள் வைக்காமல் இருந்தால் இதய பாதுகாப்பையும் அவ்வபோது பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
  • உயர் ரத்த அழுத்தத்தோடு சர்க்கரை நோயும் இருந்தால் நீங்கள் இரண்டையும் நிச்சயம் கட்டுக்குள் வைக்க வேண்டும்.
  • தொடர்ந்து மாத்திரைகள் எடுத்துகொள்ள வேண்டும்.
  • ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் கொண்டு வரக்கூடிய உணவு முறைகளை பின்பற்ற வேண்டும்.