மன்மத ராசா புகழ் நடிகையின் இந்த நடனத்த பாத்திருக்கீங்களா!

திருடா திருடி படத்தில் விஜி கதாபாத்திரத்தில் துருதுரு நடிகையாக இருந்தவர் சாயா சிங். இப்படத்தில் தனுஷுடன் அவர் மன்மத ராசா பாடலுக்கு சூப்பராக நடனமாடியதை யாராலும் மறக்க முடியாது. இப்பாடல் அச்சமயத்தில் பெரும் ஹிட்டாக அமைந்தது.

ஆடாதவர்களையும் இப்பாடல் ஆட வைத்தது எனலாம். 90 கிட்ஸ்க்கு மிகவும் பிடித்த பாடலாக அமைந்தது. இப்படத்தின் பின் சில படங்களில் மட்டுமே சாயா சிங் நடித்து வந்தார்.

அதன் பின் அவர் சீரியல் நடிகர் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார். அதன் பின் படங்களில் பெருமளவில் நடிக்கவில்லை.

தற்போது மீண்டும் திரைகளில் தோன்றி வரும் அவர் தன் பிறந்த நாளை முன்னிட்டு சிவசங்கர் மாஸ்டர் உடன் இணைந்து ராசா மன்மத ராசா பாடலுக்கு நடனமாடி ரசிகருக்கு விருந்து வைத்துள்ளார்.