ஊரடங்கு காரணமாக 37 வயது நபருக்கு வீடியோ அழைப்பில் தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சிங்பூரில் போதை பொருட்கள் கடத்துவது சட்டபடி பெரும் குற்றம். 2011ஆம் ஆண்டு மலேசியாவை சேர்ந்த புனிதன் ஜெனசன் என்பவர், ஹெராயின் கடத்தலில் ஈடுபட்டார்.
இந்நிலையில், அவர் தொடர்பான விசாரணை நடந்து வந்து. ஜெனசன் மீதான குற்றசாட்டு நிரூபிக்கப்பட்டது.
ஆனால், தற்போது நீடித்துவரும் கொரோனா பரவலால் தண்டனை விவரம் அறிவிக்கப்பாடமல் இருந்தது.
இதை அடுத்து சிங்கபூர் நீதிமன்றத்தின் செய்தி தொடர்பாளர் Reutersக்கு அளித்த பேட்டியில் நீதிபதி புனிதனிடம் முறையாக விசாரித்தார். அதன் பின் அவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும், சிங்கபூரில் வீடியோ அழைப்பு மரண தண்டனை வழங்குவது இதுதான் முதல்முறை என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு மனித உரிமைகள் குழுவை சார்ந்த பெர்னாண்டோ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வீடியோ அழைப்புகள் நிச்சயம் தாமதமாகவே பிரதிபலிக்கும். இதனால், குற்றவாளி தன்னுடைய சார்பை கூறமுடியாமலேயே போகலாம் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக நைஜீரியாவில் இதுபோன்று வீடியோ அழைப்பில் தூக்கு தண்டனை வழங்கப்பட்டதை மனித உரிமைகள் கடும் கண்டனம் தெரிவித்ததுடன். விசாரணையும் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.