சிக்ஸ் பேக் என்றதும் முதலில் நம் நினைவுக்கு வருவது சூர்யாவின் வாரணம் ஆயிரம் படம் தான். தமிழ் படத்தில் நடிகர்களில் சிக்ஸ் பேக் மூலம் அனைவரையும் முதலில் கவர்ந்தது சூர்யா தான்.
அதன் பின் பரத், விஷ்ணு, அதர்வா என பலரும் சிக்ஸ் பேக் வைத்தார்கள். அதே போல தெலுங்கு சினிமாவில் ராம் சரண் மற்றும் சில முக்கிய நடிகர்கள் இதுபோல வைத்து வந்தார்கள்.
இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் முக்கிய ஹீரோவான ஜூனியர் என் டி ஆர் தற்போது சிக்ஸ் பேக் வைத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
பாகுபலி இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வரும் RRR படத்தில் அவர் நடித்து வருகிறார். நேற்று என்.டி.ஆருக்கு பிறந்தநாள். எனவே படத்தில் தாரக் லுக்கை வெளியிட்டு அசத்தியுள்ளார்கள்.
தெலுங்கு பிக்பாஸ் சீசன் 1 ஐ தொகுத்து வழங்கியவர் அவர். இந்நிகழ்ச்சி போல அடுத்த சீசன்கள் அமையவில்லை என்பது மக்களின் எண்ணம.