ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்து வந்த இந்தியன் 2 படம் கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை பூந்தமல்லி அருகே பொழுதுபோக்கு பூங்காவில் செட் போடப்பட்டு எடுக்கப்பட்டு வந்தது.
ஆனால் படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்த விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் பெரும் சர்ச்சையாகி நீதிமன்றம் வரை சென்றது.
தற்போது கொரோனா லாக்டவுன் என படப்பிடிப்புகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இடையில் கமல்ஹானுக்கும் படத்தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக சொல்லப்பட்டது வந்தது.
மேலும் படப்பிடிப்புகள் 60 சதவீதம் முடிந்ததாகவும் தெரிவித்தனர். இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகளும் செய்யப்பட்டு வருவதாக கூறிவருகிறார்கள்.
இந்நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை சென்னை விமான நிலையம் அருகில் பின்னி மில்லுக்கு மாற்றப்பட்டுள்ளதாம்.
மேலும் பரிகார பூஜையும் செய்யப்பட்டுள்ளதாம். ஊரடங்கு முடிந்த பின் படப்பிடிப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.