யாழ்.கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் தற்கொலை! காரணம் என்ன ?

யாழ்.கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சுந்தரலிங்கம் சஞ்சீவன் (வயது-17) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மாணவனின் தந்தை பிரான்ஸில் வசித்து வரும் நிலையில், தாய் மற்றும் சகோதரருடன் கொக்குவில் பகுதியில் வசித்து வந்துள்ளார்.

இந் நிலையில் கடந்த 14 ஆம் திகதி காரைநகரில் வசிக்கும் அவரின் அம்மம்மாவின் வீட்டுக்குச் சென்ற மாணவன், அங்கு நீர் இறைக்கும் இயந்திரம் பொருத்தப்பட்டிருக்கும் சிறு அறை ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதேவேளை குறித்த மாணவன் அண்மையில் பெறுபேறுகள் வெளியாகிய கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையில் தோற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.