பிரபல இயக்குனர் ரத்னகுமார் இயக்கிய முதல் திரைப்படமான “மேயாத மான்” திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான நடிகை இந்துஜா ரவிச்சந்திரன். மேலும், வைபவின் தங்கையாக நடித்த சுடர்விழி கதாபாத்திரம் பிரபலமானதாகும்.
வேலூரை சொந்த ஊராக கொண்ட இந்துஜா, திரைத்துறையின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக “மேயாத மான்” திரைப்படத்தின் ஆட்கள் தேர்வில் கலந்து கொண்டு நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றுள்ளார்.
மேலும், தமிழ் மொழி பேச தெரிந்த கதாநாயகிகளில் மகாமுனி, பிகில் படத்தில் இந்துஜாவின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில், பட வாய்பிற்க்காக வித விதமான புகைப்படத்தை பதிவு செய்து வருகிறார்.