Microsoft Teams அப்பிளிக்கேஷனில் புத்தம் புதிய வசதி

தற்போது வீட்டிலிருந்து பணியாற்றும் ஊழியர்களுடன் தொடர்பாடலை மேற்கொள்வதற்கு பல்வேறு வீடியோ கொன்பரன்ஸ் அப்பிளிக்கேஷன்களை பல்வேறு நிறுவனங்கள் பணியாற்றிவருகின்றன.

இதனைக் கருத்திற்கொண்டு முன்னணி வீடியோ கொன்பரன்ஸ் அப்பிளிக்கேஷனை உருவாக்கிய நிறுவனங்கள் மேலும் பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்துவருகின்றன.

இவற்றின் வரிசையில் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் Teams அப்பிளிக்கேஷனிலும் புதிய வசதி ஒன்று தரப்பட்டுள்ளது.

இவ் வசதியின் ஊடாக தாம் விரும்பிய டெம்ளேட்டினை உருவாக்கி அதன் பின்னணியில் வீடியோ கொன்பரன்ஸினை மேற்கொள்ள முடியும்.

இதனை உருவாக்குவதற்கு வீடியோ கொன்பரன்ஸ் ஒன்றில் அட்மினாக இருப்பவருக்கே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது பயனர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தினை வழங்கக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.