பேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படடும் பிரபல குறுஞ்செய்தி செயலியாக வாட்ஸ் ஆப் காணப்படுகின்றது.
இச் செயலியில் தரப்பட்டுள்ள ஸ்டேட்டஸ் எனும் வசதியை பயனர்கள் மிகவும் விரும்பி பயன்படுத்துவது வழக்கமாகும்.
முன்னர் இதற்கான நேரம் 30 செக்கன்கள் வரை தரப்பட்டிருந்தது.
எனினும் சில மாதங்களுக்கு முன்னர் இந்த நேரமானது 15 செக்கன்களாக குறைக்கப்பட்டிருந்தது.
இதனால் பயனர்கள் மிகவும் அதிருப்தியடைந்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது மீண்டும் 30 செக்கன்களாக ஸ்டேட்டஸ் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் பயனர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அன்ரோயிட் சாதனங்களுக்கான 2.20.166 எனும் புதிய வாட்ஸ் ஆப் பதிப்பினை நிறுவுவதன் மூலம் இம் மாற்றத்தினை பயனர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.