பாகுபலி படத்தில் நடித்தவர் பிரபாஸ்க்கு மறைமுக வில்லனாக நடித்தவர் ராணா. இப்படம் பெரும் வரவேற்பை பெற்று உலகளவில் பெரும் வசூல் சாதனையை ஈட்டியது.
அடுத்தாக அவருக்கு காடன், மடை திறந்து என தமிழ் படங்கள் உருவாகவுள்ளன. ஹிரன்ய கஷ்யபா, விராடபர்வம் என தெலுங்கு படங்களும் கையில் உள்ளன.
தற்போது கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் ஏதும் இல்லை. நடிகை திரிஷாவுடன் அவர் காதலில் இருப்பதாக சில கிசுகிசுக்களும் சுற்றி வந்தன. ஆனால் அவர்கள் இருவருமே அதை மறுத்தனர்.
ராணா சமீபத்தில் மஹீகா பஜாஜ் என்றை பெண்ணை தன் காதலி இவர் தான் என அறிமுகம் செய்தார்.
இந்நிலையில் அவர்கள் இருவருக்கு நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் எளிய முறையில் திருமண நிச்சயதார்த்தம் இன்று நடை பெற்றுள்ளது. திருமணம் டிசம்பரில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.