வலிமை படத்தில் இந்த காட்சியை இங்கு எடுக்கவே முடியாது..!

வினோத் தமிழ் சினிமாவில் சதுரங்க வேட்டை, தீரன், நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களை இயக்கியவர்.

இவர் இயக்கத்தில் தற்போது வலிமை படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது.

தற்போதைக்கு 45% படபிடிப்பு முடிந்துவிட்டதாம், அதை தொடர்ந்து வெளிநாட்டு சம்மந்தமான காட்சிகள் எல்லாம் உள்ளதாம்.

இந்த கொரொனா பிரச்சனைகள் முடிந்ததும் அந்த காட்சிகள் எல்லாம் எடுக்கப்படுமாம்.

வினோத் எப்படியும் படத்தை டிசம்பர் மாதத்திற்குள் முடித்துவிட்டு, படத்தை பொங்கலுக்கு கொண்டு வர முயற்சிகள் செய்து வருவதாக தெரிகிறது.

மேலும், இப்படத்தில் கண்டிப்பாக வெளிநாட்டில் சில காட்சிகள் எடுக்க வேண்டும், அந்த காட்சிகளை இங்கு எடுக்கவே முடியாது, அதற்கான டெக்னிக்கல் விஷயங்கள் இங்கே இல்லவே இல்லை என்று வினோத் கூறியுள்ளார்.