சினிமா பிரபலங்கள் சிலருக்கும் சொந்த வாழ்க்கையில் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றன. வெளி இடங்களிலும் சில பண மோசடி பிரச்சனைகளில் சந்திக்கின்றனர்.
இந்நிலையில் ஹிந்தியில் டிவி நடிகர் ஆன்ஸ் அரோராவிடம் பண நடைபெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது. மும்பையில் லோகண்ட் வாலா பகுதியில் வாழ்ந்து வந்து தங்கி சினிமா வாய்ப்பு தேடி வந்தார்.
அவரை சுருதி என்ற பெண் தொடர்பு கொண்டு பிரபுதேவா இயக்கும் படத்தில் சல்மான் கான் ஹீரோவாக நடிக்கும் ஏக்தா டைகர்3 படத்தில் நடிக்க நடிகைகள், நடிகர்கள் தேர்ந்தெடுப்பதாகவும் உங்களை வில்லனாக நடிக்க வைக்கிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் அந்த பெண் நீங்கள் பிரபு தேவாவை சந்திக்க வரவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதனால் ஆன்ஸ் அரோரா மகிழ்ச்சி அடைந்துள்ளார். ஆனால் அது போல ஏஜென்ட் யாரையும் பணியமர்த்தவில்லை, நடிகர், நடிகை தேர்வு நடத்தவில்லை என்று ஏக்தா கபூர் 3 படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் தன்னை அந்த பெண் ஏமாற்றியுள்ளதாக மும்பை ஓஷிவாரா ஆன்ஸ் அரோரா போலிசில் புகார் அளித்துள்ளார்.