ரம்பாவா இது?.. செமயா மாறிட்டாங்களே..!!

பிரபல நடிகையான ரம்பா, தமிழ் திரையுலகிற்கு சுந்தர புருஷன் என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமாகினார். இதன்பின்னர் இவர் நடித்த உள்ளத்தை அள்ளித்தா, செங்கோட்டை, அருணாசலம், ராசி, விஐபி, நினைத்தேன் வந்தாய், காதலா காதலா, மின்சார கண்ணா மற்றும் ஆனந்தம் போன்ற பல படங்கள் வெற்றி பெற்றது.

இவர் தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக இருந்து வந்த நிலையில், இந்தி மற்றும் மலையாளம் படத்திலும் நடித்துள்ளார். ரம்பாவிற்கும், கனடா நாட்டினை சார்ந்த இந்திரகுமார் பத்மநாபன் என்ற நபருக்கும் கடந்த 2010 ஆம் வருடத்தில் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

இவர்கள் இருவருக்கும் தற்போது 7 வயதில் லாவண்யா என்கிற குழந்தை மற்றும் 3 வயதுடைய சாஷா என்ற மகளும் இருக்கிறார். ரம்பாவிற்கும், அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபடானது ஏற்பட்டு விவகாரத்திற்கு தயாரானதாக செய்திகள் வெளியானது.

பின்னர் இவர்களிடம் குடும்பத்தினர் பேசுவரத்தை நடத்தி சேர்த்து வைத்த நிலையில், கணவருடன் கனடாவில் மகிழ்ச்சியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், தற்போது ஆட்களே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ள புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.