பேஸ்புக் மெசஞ்சரில் பயனர்களக்கு எச்சரிக்கை தரும் புதிய வசதி

சமூகவலைத்தளங்களின் அரசனாகத் திகழும் பேஸ்புக் ஆனது அவ்வப்போது பயனர்களின் தரவுப் பாதுகாப்பு தொடர்பில் பல சங்கடங்களை எதிர்நோக்கி வருகின்றது.

பேஸ்புக் தரவுகள் ஹேக் செய்யப்படுவதே இதற்கு பிரதான காரணமாகும்.

இதனைக் கருத்திற்காண்டு பேஸ்புக் மெசஞ்சரில் புதிய பாதுகாப்பு அம்சம் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது பேஸ்புக்.

இதன்படி சட் செய்துகொண்டிருக்கும் தருணத்தில் அநாவசியமான செயற்பாடுகள் இடம்பெறும்போது அது தொடர்பாக எச்சரிக்கை விடக்கூடியதாக இருக்கின்றது.

இதனை அறிந்து பயனர் தனது கணக்கினை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

இவ் வசதியானது கடந்த மார்ச் மாதம் அன்ரோயிட் சாதனங்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டபோதிலும் iOS சாதனங்களுக்காக அடுத்த வாரம் அளவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.