கோடிக்கணக்கான மக்களின் தனிப்பட்ட தகவல்களை Dark Web இற்கு விற்பனை

இணையப் பாவனையின் அதிகரிப்பு தற்போது மிகவும் அபரிமிதமானதாக இருக்கின்றது.

இப்படியான நிலையில் சைபர் குற்றங்களும் அதிகரித்தே வருகின்றன.

இந்த வரிசையில் சுமார் 2.9 கோடி இந்திய மக்களின் தனிப்பட்ட தரவுகள் Dark Web தளத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இவற்றுள் மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி இலக்கம், வீட்டு முகவரி, கல்வித் தகைமை மற்றும் வேலை தொடர்பான அனுபவங்கள் உட்பட பல தரவுகள் அடங்குகின்றன.

குறித்த தரவுகள் அனைத்தும் இலவசமாகவே வழங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Unacademy எனும் தொழில்நுட்ப நிறுவனமே இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

எனினும் இத் தரவுகள் எங்கிருந்து சைபர் குற்றவாளிகளால் திருடப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை.