இலங்கை செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் புகழ் பெற்றார். இதனிடையே லாஸ்லியாவை வெள்ளித்திரையில் காண வேண்டுமென தமிழ் ரசிகர்கள் ஆவலாக இருந்தனர். அவர்களது கனவை நிறைவேற்றும் விதமாக லாஸ்லியாவிற்கும் படவாய்ப்புகள் குவிந்தன.
இந்நிலையில், சினிமாவில் நடிப்பதற்காக தனது உடல் எடையை குறைத்து உள்ள லாஸ்லியா ஸ்லிம் லுக்கில் பார்க்க செம்ம க்யூட்டாக மாறிவிட்டார்.
லாஸ்லியா, ஆரியுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் புதிய படத்திற்கு பிப்ரவரி மாதம் பூஜை போடப்பட்டு, அந்த புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின.
இதைத்தொடர்ந்து, லாஸ்லியா கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிப்பில் உருவாகும் “பிரண்ட்ஷிப்” திரைப்படத்தில் ஹர்பஜனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.
அந்த படத்தில் நடித்து வரும் காமெடி நடிகர் சதீஷ் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக “பிரண்ட்ஷிப்” படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இதேபோன்று அந்த படத்தில் நடித்து வரும் லாஸ்லியாவின் ஹீரோயின் லுக்குடன் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பார்க்க செம்ம சூப்பராக இருக்கும் லாஸ்லியாவின் அந்த புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது.