இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள சுந்தர்கர் மாவட்டத்தின் ரைபோகா காவல் நிலையத்தில் பாலியல் புகார் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த புகாரில் காவல் துறையினர் கிஷோர் என்ற நபரை கைது செய்துள்ளனர்.
மேலும், இவர் தனது வளர்ப்பு மகளை கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும், பல வேதனைகளை சந்தித்துள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த சிறுமிக்கு ஒரு வயது இருக்கும் சமயத்தில் தந்தை இறந்துவிட்ட நிலையில், தாய் இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.
சிறுமியை தன்னுடன் அழைத்து செல்லாத தாய், அவரது அத்தையின் பராமரிப்பில் விட்டு சென்றுள்ளார். அத்தையின் கணவரான கிஷோர் மதுபோதையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததும், சிறுமியை தொடர்ந்து மூன்று வாரத்திற்கும் மேலாக சித்ரவதை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.
பெண்ணுறுப்பு வலி தாங்க இயலாத சிறுமி, காமுகனின் கொடூரத்தால் பல உடல் வேதனையையும் அனுபவித்துள்ளார். இந்த விஷயம் குறித்து சிறுமி தனது அத்தையிடம் தெரிவிக்கவே, இந்த விஷயம் தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் அத்தை புகார் அளித்துள்ளார். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், காமுகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.