தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி புயல் நடிகையாக விலங்கி வந்தவர் நடிகை ஷகிலா. மலையாள சினிமாவில் அறிமுகமாகி பின் படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். 90ஸ் கிட்ஸ்களில் கனவுகன்னியாகவும் இருப்பவர் இவர்.
சில ஆண்டுகளுக்கு முன் பத்திரிக்கைக்கு பேட்டியொன்று கொடுத்துள்ளார். நடிகை சில்க் சுமிதா தான் எனது முன்மாதிரி. அவரால் நான் பெருமைப்படுகிறேன். அவரை விட கவர்ச்சியாக நடிக்க ஆசைப்பட்டு சினிமாவில் நடித்து வந்தேன்.
மேலும் எனது முதல் படத்தில் அவருக்கே அப்படத்தில் தங்கையாக நடித்தேன். அவர் டூ பீஸ் மற்றும் குட்டைப் பாவடை அணிந்து நடிப்பதை பார்த்தேன். அது என்னை ஈர்த்தது.
அவரை விட கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது. அரைகுறை ஆடைகள், ஸ்லீவ் லெஸ் உடைகள் அணிந்து நான் நடிப்பதை ஆரம்பத்தில் குடும்பத்தினர் ஏற்கவில்லை. ஆனால் அடுத்த நாள் அவர்களுக்கு செலவுக்கு பணம் இருக்காது.
இதனால் நான் அப்படி நடிப்பதை தவிர வேறு வழியில்லை. நான் நடிக்கும் வரை அதுபோன்ற கேரக்டர்களும் உண்டு என்பது கூட யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.
மொழி புரியாத ஊர்களில் கூட என் படம் ரிலீஸ் ஆனது. நான் நடிக்கும் போது எனக்கு பக்கத்தில் இருப்பவர்களுக்கு கூட நான் என்ன கேரக்டரில் நடிக்கிறேன் என்பதை கண்டுபிடிக்க முடியாது.
இப்போது எனது பெயரை கூகுளில் தேடினால் ஏராளமான கிளாமர் புகைப்படங்கள் வருகின்றன. அப்போது இதையெல்லாம் நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அதே நேரம் நான் இப்படி இருப்பதால், எனது சொந்த தங்கை கூட என்னுடைய தொடர்பை துண்டித்துவிட்டார். அவருடைய குடும்பம் தான் அவருக்கு பெரியது.