வைத்திய துறைகளில் பயன்படுத்தப்படும் N95 முகக்கவசத்தின் தேவையானது இன்று பொதுமக்கள் மத்தியிலும் முக்கிய இடத்தினைப் பெற்றுள்ளது.
எனினும் இந்த முகக்கவசத்திற்கு மாற்றாக துணியில் உருவாக்கப்பட்ட முகக்கவசங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆனால் இவை முழுமையான பாதுகாப்பினை ஒருபோதும் வழங்குவதில்லை.
ஏன் N95 முகக்கவசம் கூட 100 சதவீத பாதுகாப்பினை வழங்குவதில்லை என்பதே உண்மையாகும்.
இதனால் வினைத்திறன் கொண்ட நார்வகையின் உதவியுடன் N95 முகக்கவசத்தின் வினைத்திறனை அதிகரிக்க ஆராய்ச்சியாளர்கள் முனைந்துவருகின்றனர்.
சவுதி அரேபியாவில் உள்ள Abdullah University of Science and Technology (KAUST) ஆராய்ச்சியாளர்களே இம் முயற்சியில் இறங்கியுள்ளனர்.