இருட்டு அறையில் முரட்டுக்குத்து 2 படம் என்னானது?

18 வயது கடந்தோரை குதூகலிக்க வைத்த படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் கடந்த 2018 வயதில் அடல்ட் காமெடி படமாக எடுக்கப்பட்டு வெளியாகி நல்ல வரவேற்பையும் வசூலையும் ஈட்டியது.

கௌதம் கார்த்திக், ஷாரா, யாசிகா ஆனந்த், வைபவி சாண்டில்யா என பலர் நடிக்க தமிழ் சினிமா படங்களில் ஒரு மாற்று கதைக்களமாக அமைந்தது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்போவதாகவும் அதில் தானே ஹீரோவாக நடிக்கப்போவதாகவும் இயக்குனர் அறிவித்தார்.

இந்த கோடை விடுமுறையிலேயே வெளியாக வேண்டிய இப்படம் கொரோனா ஊரடங்கால் தள்ளிப்போனது. இந்நிலையில் இப்படத்தின் தமிழ் டிஜிட்டல் உரிமை தவிர மற்று அனைத்து உரிமைகளையும் ராக்ஃபோர்ட் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் வாங்கியுள்ளதாம்.