அண்மையில் தான் நடிகர்களின் மரணங்கள் அடுத்தடுத்து இடம் பெற்று அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தின. இந்நிலையில் இளம் நடிகர் மோகித் பஹேல் இறந்துள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சல்மான் கான், அசின் நடித்துள்ள ரெடி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் மோகித். ராணி முகர்ஜி, சயீப் அலி கான் ஆகியோர் நடிப்பில் 2 படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.
அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை எடுத்து வந்த அவர் ஊரடங்கினால் தன் சொந்த ஊரான மதுராவுக்கு சென்றுள்ளார்.
அங்கு அவர் திடீரென மரணம் அடைந்துள்ளார். அவருடன் நடித்த நடிகை பிரனீத் சோப்ரா தன் டுவிட்டர் பக்கத்தில் மோகித் திறமையானவர், இனிமையானவர், எப்போது உற்சாகத்துடனும், நேர்மறை எண்ணங்களுடனும் இருப்பார். அவரின் மரணம் வருத்தத்தை தந்துள்ளது என கூறியுள்ளார்.
One of the nicesttt people to work with! Happy, positive and motivated always. Love you Mohit. RIP? #JabariyaJodi https://t.co/b0Gr6GpCxg
— Parineeti Chopra (@ParineetiChopra) May 23, 2020