கரோனா வைரஸின் தாக்கம் காரணமாக நடிகர்கள் மற்றும் நடிகைகள் வீட்டிலேயே முடங்கியுள்ள நிலையில், செல்லப்பிராணிகளை கொஞ்சுதல், உடற்பயிற்சி செய்தல், சமையல் செய்தல், புத்தகம் படிப்பது, நடனம் கற்பது, ஓவியம் வரைவது போன்று தங்களின் பொழுதை கழித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகை அமலாபால் தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மத்திய, மாநில அரசுகள் மக்களை காப்பாற்றும் பொருட்டு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. ஊரடங்கில் எதனையும் கற்றுக்கொள்ளவில்லை என்ற வருத்தம் வேண்டாம்.
வாழ்க்கை என்பது பந்தயம் என்ற எண்ணமானது மாற வேண்டும். அதிகளவு அழுத்தம் தரும் பிரஷர் குக்கரில் இருந்து முதலில் அனைவரும் வெளியே வாருங்கள். இந்த ஊரடங்கு கற்றுக்கொள்வதற்கான நேரம் அல்லது உற்பத்தியை பேருக்கும் நேரம் கிடையாது. ஒருவரை போல நாமும் செய்ய வேண்டும் என்று அவரின் பின்னாலேயே ஓட தேவையில்லை என்று கூறியுள்ளார்.