TikTok கணக்கினை நீக்குவது எப்படி?

இன்று உலக அளவில் ஏராளமானவர்கள் டிக்டாக் பிரியர்களாகவே இருக்கின்றனர்.

எனினும் சிலர் இதிலுள்ள பிரச்சினைகளை கருத்திற்கொண்டு விடுபட எண்ணுவார்கள்.

இச் சந்தர்ப்பத்தில் டிக் டாக் கணக்கினை நீக்கவேண்டிய சூழ்நிலை உருவாகலாம்.

அவ்வாறு டிக்டாக் கணக்கினை நீக்குவதற்கு அப்பிளிக்கேஷனின் கீழ் பகுதியில் உள்ள Me எனும் பொத்தானை அழுத்த வேண்டும்.

அடுத்தாக Menu பொத்தானை அழுத்தும்போது தோன்றும் Settings and Privacy என்பதில் Manage my Account என்பதை தெரிவு செய்யவும்.

தற்போது Delete account எனும் பொத்தான் தென்படும்.

இதில் கிளிக் செய்யும்போது கணக்கின் உண்மைத் தன்மையை சரிபார்க்குமாறு கேட்கும்.

இதனை சரிபார்த்ததும் மீண்டும் Delete Account என்பதை தெரிவு செய்யும்போது தோன்றும் Pop-Up விண்டோவில் Delete என்பதை மீண்டும் கிளிக் செய்யவும்.