இறந்தவர்கள் கனவில் வந்தால் நன்மையா? ஆபத்தா?

திடீர்ன்னு ஒருவர் தூக்கத்திலிருந்து எழுந்து அலறுவார்கள் என்னவென்று கேட்டால் யாரோ இறந்து போனமாதிரி கனவு கண்டேன், செத்தவங்க கனவில் வந்தாங்கன்னு சொல்வதை பார்த்திருக்கிறோம். நமக்கு கூட அதுமாதிரியான கனவுகள் வந்திருக்கக்கூடும்.

கனவு என்பது மனிதனுக்கு மறு உலகம் மாதிரி. பகல் முழுவதும் அவன் பூமியில் வாழ்கிறான். இரவில் அவன் கனவு என்னும் மறு உலகத்தில் வாழ்கிறான்.

ஏன் இறந்தவர்கள் நம் கனவில் வருகிறார்கள்? நம் கனவில் வந்தால் என்ன பலன் வரும், நல்லாதா, கெட்டதான்னு பார்ப்போம்.

நுண்ணியம் வாய்ந்த சக்தி இறந்தவர்களுக்கு கிடைக்கும். நீங்கள் பகலில் விழித்திருக்கும் நிலையில் இருப்பதை விட தூக்கத்தில் தான் அவர்கள் உங்களை சுலபமாக தொடர்பு கொள்ள முடியும்.

நாம் விழித்திருக்கும் போது, நம்முடைய ஐம்புலன்களும் வேலை செய்யும். அதனால் இறந்த ஆன்மாக்கள் நம்மை தொடர்பு கொள்ள முடியாது. மிக உயர்ந்த ஆன்மீக பீடத்தை அடைந்தவர்களை தவிர மற்றவர்களால் ஆன்மாவை உணர்ந்து கொள்ள முடியாது.

கனவுகளின் போது, நம் மனது நுட்பமான செய்திகளுக்கு அதிகமாக செவி சாய்க்கும். அதனால் தான் இறந்தவர்கள் நம் கனவுகளில் தொடர்பு கொள்கிறார்கள்.

இறந்து போன சொந்தக்காரரோ அல்லது நண்பனோ உங்கள் கனவில் தோன்றுவதற்கு ஆன்மீக காரணமும் இருக்கிறது.

சில சமயம், இறந்து போன ஆன்மாவிற்கு, பூமியில் வாழும் தன் சந்ததி வழியாக ஏதேனும் உதவி தேவைப்படலாம். அல்லது உங்கள் உதவி மூலமாக யாரையாவது பலி தீர்க்க நினைக்கலாம். அல்லது குடும்பம்/நண்பர்கள் வட்டத்தில் யாருடனாவது தொடர்பு கொள்ள நினைக்கலாம். இதனால்தான் இறந்தவர்கள் நம் கனவில் வருகிறார்கள்.

நமக்கு மிகவும் பிடித்தவர்கள் இறந்துவிட்டால் சில நேரங்களில் நமது கனவில் அவரது முகங்கள் மற்றும் அவரது தோற்றங்களும் கனவில் வருவது நிகழ்வு.

அவ்வாறு இறந்தவர்கள் நம் கனவில் வருவதால் ஏற்படும் பலன்கள் பற்றி நாம் பார்ப்போம்.

  • நமக்கு நெருங்கிய சிலர் யாராவது இறந்து விட்டதுபோல நமக்கு கனவுகள் வரும் அவ்வாறு கனவுகள் வந்தால் துன்பங்கள் அனைத்தும் விலகப் போகிறது என்று அர்த்தம்.
  • அதுபோல் இறந்து போனவர்களை நாம் தூக்கி செல்வது போன்ற கனவு வந்தால் நமக்கு நன்மைகள் வந்து சேரப்போவதாக அர்த்தம்.
  • ஏற்கனவே, இறந்தவர்கள் நம் கனவில் வந்து அழுவது போல கனவு வந்தால் அது நமக்கு நல்லது கிடையாது. இறந்தவர்கள் கனவில் வந்து அழுதால் கோவிலுக்கு சென்று கடவுளுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.
  • இறந்து போன தாய், தந்தையை கனவில் கண்டால் கனவு காணும் நமக்கு வரப்போகும் ஆபத்துக்களை அவர்கள் தங்களது வருகையை சுட்டிக்காட்டி எச்சரிக்கை செய்வதற்காக வந்துள்ளார்கள் என்று அர்த்தம்.
  • எனவே, தாய் அல்லது தந்தை இறந்து போன பிறகு நம் கனவில் வந்தால் நமக்கு ஏதோ ஒரு ஆபத்து நிகழப்போகிறது என்று நாம் முன்கூட்டியே எரிச்சரிக்கையாக இக வேண்டும்.
  • இயற்கையாகவே சிலர் இறந்து இருப்பார்கள் அவ்வாறு இயற்கை மரணமடைந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று கனவுகள் சம்பந்தப்பட்ட நூல்களில் எழுப்பட்டுள்ளது.
  • பேரன், பேத்தி என்று பெற்றெடுத்து நன்றாக தங்களது தலைமுறைகளுடன் வாழ்ந்து அனுபவித்த பெற்றோர்கள் மரணமடைந்து நம் கனவில் வந்தால் அது நமக்கு அவர்கள் நேராக வந்து ஆசீர்வதிப்பது போன்ற பலனைத்தரும்.
  • எனவே, நம் முன்னோர்கள் நம் கனவில் வருவது மிகவும் நல்லது தான். அவர்களின் ஆசி நமக்கு எப்போதும் உண்டு என்பதற்கான அர்த்தம் அது.
  • ஆனால் விபத்து தற்கொலை போன்ற மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால் சில தீமைகள் ஏற்பட போவதாக அர்த்தம்.
  • மேலும் அந்த கனவுகள் வந்து சென்ற பின் நமக்கு உடல் நலம் சரியில்லாமல் போக வாய்ப்புகள் உள்ளது.
  • எனவே, இது போன்ற கனவுகள் கண்டால் கோவிலுக்கு சென்று வருவது நல்லது.