அமெரிக்காவில் மகள் குளிக்கும் காணொளியினை முகநூலில் பதிவிட்ட தாயை 155 ஆண்டுகள் சிறையில் அடைப்பதற்கு நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் மேற்கு விர்ஜினியா மாகாணத்தில் ஹேவி(43) என்ற பெண் தனது 5 வயது மகள் குளிக்கும் காணொளியினை பதிவிட்டுள்ளார்.
சோமர்ஸ் என்பவர் இக்காட்சியினை அவதானித்து பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர் தொழில்நுட்பக் குழுவை வைத்து ஹேவின் பதிவுகளை பொலிசார் ஆய்வு செய்து அவர்தான் குற்றவாளி என உறுதிப்படுத்தினர்.
இந்த வீடியோ மட்டுமின்றி ஏராளமான வீடியோவை அவர் பேஸ்புக்கில் பதிவிட்டு வந்த அவர், தனது புகைப்படம் மட்டும் எதுவும் பதிவிடாமல் இருந்துள்ளார்.
மெர்சர் கவுண்டி சர்க்யூட் நீதிமன்ற நீதிபதி வில்லியம் சாட்லர் தெரிவிக்கையில், நான் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிபதியாக இருக்கிறேன். இது நான் அனுபவித்த மிக மோசமான மற்றும் பயங்கரமான வழக்குகளில் ஒன்றாகும். இந்த வீடியோவால் இந்த குழந்தை இந்த அவமானத்தில் இருந்து வெளியில் வரமுடியாது.
எனவே அந்த தாய்க்கு பாலியல் வன்கொடுமை தொடர்பான 2 வழக்குகளில், 25 முதல் 100 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், பெற்றோர் அல்லது பாதுகாவலரால் 2 முறை பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதற்காக அவருக்கு 10 முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இது ஹேவிக்கு 45 முதல் 155 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அளித்ததாக கூறப்படுகின்றது.