கன்னட திரையில் கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. ஆரம்பத்தில் கன்னட படங்களில் நடித்து வந்தாலும் மாடலிங் மூலம் புகழ் பெற்றார்.
இதையடுத்து தமிழில் நடிகர் ஜெயம்ரவியின் கோமாள படத்தில் பள்ளிப்பருவ காதலியாக நடித்து பிரபலமானார். இதைதொடர்ந்து பப்பி என்ற படத்தில் படுகவர்ச்சி காட்டி நடித்தார்.
இதன்மூலம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்து வருகிறார். சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சம்யுக்தா கவர்ச்சி புகைப்படங்களையும், உடற்பயிற்சி, நடனம் வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார்.
தற்போது ஆண் நண்பருடன் பொது இடத்தில் ஜிம்னாஸ்டி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இடப்பை பிடித்தவாறு நண்பர் தூக்கி உடலை நேராக வைத்து அந்தரத்தில் தொங்கி வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.