மிகப்பெரிய தரவுத்தளத்திலிருந்து பல மில்லியன் கணக்கான தாய்லாந்து பயனர்களின் தரவுகள் கசிந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இதன்போது சுமார் 8 பில்லியன் வரையான தரவுகள் கசிந்துள்ளதாக தாய்லாந்தின் ThaiCERT அமைப்பு தெரிவித்துள்ளது.
எனினும் குறித்த தரவுத்தளமானது எந்த நிறுவனத்திற்கு சொந்தமானது என இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் Advanced Info Service (AIS) எனப்படும் தாய்லாந்து மொபைல் வலையமைப்பு நிறுவனத்தினுடையதாக இருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் DNS தகவல்கள் அதிகம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த DNS தகவல்கள் ஆனது கடவுச்சொற்களைப் போன்றோ அல்லது தனிப்பட்ட குறுஞ்செய்திகளைப் போன்றோ பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது அல்ல என குறிப்பிட்டுள்ளனர்.
மாறாக பயனர்கள் எந்த இணையத்தளங்களைப் பயன்படுத்துகின்றனர் என்பது தொடர்பான தகவல்களையே இந்த DNS கொண்டிருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.