மைக்ரோசொப்ட் நிறுவனமானது விண்டோஸ் 7 இயங்குதளத்தினை 2009 ஆம் ஆண்டு ஜுலை மாதம் அறிமுகம் செய்திருந்தது.
மிகப்பெரிய பயனர் இடைமுக மாற்றத்துடன் அறிமுகம் செய்யப்பட்ட இவ் இயங்குதளமானது பலத்த வரவேற்பினைப் பெற்றிருந்ததுடன் 10 வருடங்களை தாண்டி இன்றும் பலரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
எனினும் விண்டோஸ் 8, விண்டோஸ் 10 எனும் இயங்குதளப் பதிப்புக்கள் பின்னர் அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் விண்டோஸ் 7 இயங்குதளத்திற்கான அனைத்து பாதுகாப்பு உதவிகளையும் (Security Support) மைக்ரோசொப்ட் நிறுவனம் நிறுத்தியுள்ளது.
இதன் பின்னர் குறித்த இயங்குதளத்தினை பயன்படுத்துவது ஆபத்தானது எனவும் இலகுவாக ஹேக் செய்து தகவல்களை திருட முடியும் எனவும் பலரால் நம்பப்படுகின்றது.
பெருநிறுவனங்கள், வங்கிகள் போன்றவற்றில் இப் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அவற்றில் உள்ள கணினிகளில் இயங்கதளங்கள் மாற்றப்பட்டுவருகின்றன.
எனினும் தனிநபர் பாவனைக்கு சில வழிமுறைகளைப் பின்பற்றி பயன்படுத்த முடியும்.
- இதன்படி கண்டிப்பாக பிரத்தியேக ஆன்டிவைரஸ் மென்பொருள் ஒன்று நிறுவ வேண்டும்.
இதன் ஊடாக சைபர் தாக்குதலை கட்டுப்படுத்த முடியும்.
- இணைய உலாவியினை அப்டேட் செய்தல்.
மைக்ரோசொப்ட் நிறுவனமானது 2021 ஆம் ஆண்ட ஜுலை மாதம் வரை குரோம் இணைய உலாவியானது விண்டோஸ் 7 இயங்குளத்தில் இயங்கக்கூடியதாக இருக்கும் என உறுதியளித்துள்ளது.
அதேபோன்று ஏனைய இணைய உலாவிகளையும் அப்டேட் செய்வதன் ஊடாக இணையவழி சைபர் தாக்குதல்களை தவிர்க்க முடியும்.
* விளம்பரங்களை தடைசெய்தல்
இணையத்தளங்களைப் பயன்படுத்தும்போது அவற்றில் விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படுவதுண்டு.
எனவே அவற்றின் கவர்ச்சியால் கிளிக் செய்வதன் மூலம் சைபர் தாக்குதல்களுக்கு வழிசமைத்து கொடுப்பதாக அமைந்துவிடும்.
இதனைத் தவிர்ப்பதற்கு Ad Blocker நீட்சிகளைப் பயன்படுத்தி விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை தவிர்க்க வேண்டும்.
* மென்பொருட்களின் அப்டேட் செய்யப்பட்ட பதிப்புக்களை பயன்படுத்துதல்
இயங்குதளம் விண்டோஸ் 7 ஆக இருந்த போதிலும் MicroSoft நிறுவனத்தின் புதிய மென்பொருட்கள் அவற்றில் செயற்படக்கூடியதாகவே இருக்கும்.
எனவே புதிய மென்பொருட்களைப் பயன்படுத்துவதன் ஊடாக குறைந்தது மென்பொருட்களுக்கான பாதுகாப்பு உதவிகளையாவது மைக்ரொசொப்ட் நிறுவனத்திடமிருந்த பெற்றுக்கொள்ள முடியும்.
இவ்வாறான முன்னேற்பாடுகளுடன் விண்டோஸ் 7 இயங்குதளத்தினை தொடர்ந்து பயன்படுத்த முடியும்.
அவ்வாறில்லாவிடின் விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் 10 இயங்குதளங்களை நிறுவிப் பயன்படுத்துவதே சிறந்தது.