அத்திந்தோம் என கொண்டாட வைத்து ரா ரா என அனைவரையும் மிரள வைத்த படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கத்தில் கடந்த 2005 ல் வெளியான இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிதான் கதாநாயகன். சந்திரமுகியாக ஜோதிகா நடித்திருந்தார்.
வெற்றிகரமாக ஓடிய இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை மீண்டும் வாசு தயாரிக்கிறார்.
இந்நிலையில் இந்த சந்திரமுகி 2 ல் வேட்டையனாக நடிப்பது லாரன்ஸ் மாஸ்டர் என்றும், சந்திரமுகியாக சிம்ரன் நடிக்கப்போகிறார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது.
ஜோதிகாவிடம் சந்திரமுகி 2 குறித்து கேட்ட போது யாரும் என்னை படம் குறித்து அணுகவில்லை என கூறியதோடு, சிம்ரன் சந்திரமுகி கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என கூறிவிட்டாராம்.
சந்திரமுகி படத்தில் ஜோதிகா வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகை சிம்ரன், அச்சமயத்தில் அவர் கர்ப்பமாக இருந்ததால் படத்திலிருந்து விலகி பின் ஜோதிகா நடித்தது குறிப்பிடத்தக்கது.