திடீரென தடைவிதித்த உலக சுகாதார ஸ்தாபனம்: எதற்கு?

கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கு இதுவரை எந்தவிதமான மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை.

எனினும் பல்வேறு ஆராய்ச்சிகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றன.

இப்படியிருக்கையில் மலேரியாவிற்கு எதிராக பயன்படுத்தப்படும் ஹைட்ரொக்ஸி குளோரோகுயின் மாத்திரையானது கொரோனாவிற்கு எதிராகவும் போராடும் என்ற நம்பிக்கை நிலவிவந்தது.

ஆனால் பின்னர் அந்த நம்பிக்கை தவிடுபொடியானது.

ஆனாலும் தொடர்ந்தும் ஹைட்ரொக்ஸி குளோரோ குயின் மாத்திரையை அடிப்படையாகக் கொண்டு ஆய்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்நிலையில் கொரோனா ஆய்வுகளிற்கு ஹைட்ரொக்ஸி குளோரோ குயினை பயன்படுத்துவதற்கு திடீரென உலக சுகாதார ஸ்தாபனம் தற்காலிகமாக தடைவிதித்துள்ளது.