புதிய வசதியை அறிமுகம் செய்யும் முயற்சியில் யூடியூப்

இன்று பல மில்லியன் பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் முன்னணி வீடியோ பகிரும் தளமாக யூடியூப் காணப்படுகின்றது.

இதற்கான மொபைல் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி ஒன்று விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதன்படி கூகுள் தேடலுக்கான பெறுபேறுகளை யூடியூப் அப்பிளிக்கேஷனூடாகவும் மேற்கொள்ளக்கூடிய வசதி தரப்படவுள்ளது.

இதன் ஊடாக வீடியோக்களை மாத்திரமன்றி இணைய இணைப்புக்களையும் பயனர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

இதற்கான பரீட்சார்த்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சில பயனர்களுக்கு இவ் வசதி வழங்கப்பட்டுள்ள நிலையில் பிரபல இணையத்தளம் ஒன்று குறித்த வசதியினை காண்பிக்கக்கூடிய ஸ்கிரீன்ஷாட் ஒன்றினை பகிர்ந்துள்ளது.

இதேவேளை iOS மற்றும் Android பயனர்கள் இவ் வசதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.