மற்றுமொரு வீடியோ அழைப்பு அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்கிறது பேஸ்புக்

குழுக்களாக இணைந்து வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடிய வசதியை அண்மையில் Messenger Room ஊடாக பேஸ்புக் வழங்கியிருந்தது.

இப்படியான நிலையில் மற்றுமொரு குழு வீடியோ அழைப்பு அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அப்பிளிக்கேஷன் ஆனது CatchUp என அழைக்கப்படுகின்றது.

இதனை பேஸ்புக் நிறுவனத்தின் NPE Team (new product experimentation) உருவாக்கியுள்ளது.

தவிர இந்த அப்பிளிக்கேஷன் ஆனது அமெரிக்காவில் பரீட்சார்த்த ரீதியாக பயன்படுத்துவதற்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

iOS மற்றும் Android சாதனங்களில் குறித்த அப்பிளிக்கேஷனை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.