வில்லன் நடிகர் செய்யும் உதவியை கண்டு நெகிழ்ந்துபோன ரசிகர்கள்..

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நபர்களின் எண்ணிக்கை 58 இலட்சத்தை நெருங்கியுள்ளது. சுமார் 3.50 இலட்சத்திற்கும் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, தவித்து வருகின்றனர். இதனால், பல பிரபலங்கள் உதவி வருகின்றனர். அந்த வகையில், பிரபல வில்லன் நடிகரான சோனு சூட் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தங்க தனது நட்சத்திர விடுதியை அனுப்பினார். இதுமட்டுமல்லாது தினமும் சுமார் 45 ஆயிரம் நபர்களுக்கு உணவு வழங்கி வருகிறார்.

சொந்த ஊர்களுக்கு செல்ல இயலாமல் தவித்து வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சொந்த செலவில் ஊர்களுக்கு அனுப்பி வைத்தும் வருகிறார்.

இதனால் இவரிடம் நேரடியாக சமூக வலைத்தளம் மற்றும் அலைபேசி வழியாக பலரும் உதவி கேட்டு வருகின்றனர். உதவிக்கான தகவலை வைத்து பல உதவியையும் செய்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் சோனுவிடம் ட்விட்டர் வாயிலாக ரசிகர் தனது பிகார் காதலியுடன் தன்னை சேர்த்து வைக்க கூறி கோரிக்கை வைக்கவே, இதற்கு பதில் அளித்த நடிகர் சோனு “உங்களின் உண்மையான காதலுக்கு வந்த சோதனை காலம் இது.. சில நாட்கள் விலகியிருக்கலாம் சகோதரா” என்று கூறியுள்ளார்.